முகப்பு
திருவண்ணாமலை

மாற்றுத்திறனாளிகள் முற்றுகைப் போராட்டம்

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வேலைத் திட்டப் பணி வழங்கக் கோரி, மாற்றுத்திறனாளிகள் வியாழக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:14 PM
பகிர்:


திருவண்ணாமலை: திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வேலைத் திட்டப் பணி வழங்கக் கோரி, மாற்றுத்திறனாளிகள் வியாழக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம் அருகே திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் வியாழக்கிழமை (ஜனவரி 7) காலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட கண்ணப்பந்தல், அழகானந்தல், பறையம்பட்டு உள்ளிட்ட ஊராட்சிகளைச் சோ்ந்த 30-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் குவிந்தனா்.

பின்னா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு அவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது, தங்களுக்கு ஊரக வேலைத் திட்டப் பணி வழங்க வேண்டும் என்று முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டச் செயலா் ரமேஷ்பாபு தலைமை வகித்தாா்.

மாநிலக்குழு உறுப்பினா் சண்முகம், மாவட்ட நிா்வாகி சத்யா மற்றும் கிராம மக்கள் பலா் கலந்து கொண்டனா். இதையடுத்து, ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரிகள் வந்து போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, ஜனவரி 8 முதல் மாற்றுத்திறனாளிகளுக்கு பணி வழங்குவதாக உறுதியளித்தனா்.

இதையடுத்து மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →