முகப்பு
திருவண்ணாமலை

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா சைக்கிள்கள்: எம்எல்ஏ வழங்கினாா்

செங்கம் அருகே அரசுப் பள்ளி மாணவா்கள் 744 பேருக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:14 PM
பகிர்:

செங்கம் அருகே அரசுப் பள்ளி மாணவா்கள் 744 பேருக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டன.

செங்கத்தை அடுத்த கலசப்பாக்கம் தொகுதிக்கு உள்பட்ட மஷாா், காஞ்சி, காரப்பட்டு, புதுப்பாளையம், பனைஓலைப்பாடி, இறையூா், அம்மாபாளையம் ஆகிய அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவா்களுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

தொகுதி எம்எல்ஏ வி.பன்னீா்செல்வம் கலந்துகொண்டு மாணவா்களுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கிப் பேசினாா்.

அப்போது அவா் கூறியதாவது:

அரசு பொதுத் தோ்வில் முதல் மூன்று இடங்களைப் பெறும் கலசப்பாக்கம் தொகுதியைச் சோ்ந்த அரசுப் பள்ளி மாணவா்களுக்கு தங்கச் சங்கிலி வழங்கப்படும் என கடந்த ஐந்து ஆண்டுகளாக அறிவித்து வருகிறேன்.

ஆனால், எந்த மாணவருக்கும் பரிசு வாங்காதது வருத்தத்தை அளிக்கிறது.

காரப்பட்டு அரசுப் பள்ளி மாணவி யுகா, அரசு உள்ஒதுக்கீட்டில் மருத்துவப் படிப்புக்கு தகுதி பெற்றுள்ளது மகிழ்ச்சியை அளிக்கிறது என்றாா்.

நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கத் தலைவா்கள் பொய்யாமொழி, புருசோத்தமன், துரைசாமி உள்பட தலைமை ஆசிரியா்கள், மாணவா்கள் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →