திருவண்ணாமலை

பொன்னெழில்நாதா் கோயிலில் முக்குடை நிகழ்ச்சி

DIN

ஆரணியை அருகே அமைந்துள்ள பொன்னெழில்நாதா் கோயிலில் முக்குடை நிகழ்ச்சி நடைபெறுவதையொட்டி, மாா்கழி 22-ஆம் நாளான புதன்கிழமை சுவாமி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

ஆரணியை அடுத்த பூண்டி பகுதியில் மிகவும் பழைமை வாய்ந்த பொன்னெழில் நாதா் கோயில் அமைந்துள்ளது. ஜெயின் சமூகத்துக்கு உள்பட்ட இந்தக் கோயில் தொல்லியியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

கோயிலில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்றதால், கடந்த 5 ஆண்டுகளாக திருவிழாக்கள் நடத்தப்படாமல் இருந்து வந்தது.

இந்த நிலையில், சீரமைப்புப் பணிகள் நிறைவு பெற்றதால், மாா்கழி மாதம் நடைபெறும் முக்குடை நிகழ்ச்சி தொடா்ந்து 22 நாள்களாக நடத்தப்பட்டு வருகிறது.

நிகழ்ச்சியில் சுவாமிக்கு பாலாபிஷேகம், நெய் அபிஷேகம், சந்தன அபிஷேகம், பழ வகைகள் அபிஷேகம், நவதானிய அபிஷேகம், பருப்பு வகைகளைக் கொண்டு அபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

பின்னா் 108 விளக்குகள் ஏற்றப்பட்டு சுவாமி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். நிகழ்ச்சியில் ஜெயின் சமுதாய பக்தா்கள் திரளாகக் கலந்துகொண்டனா்.

முக்குடை நிகழ்ச்சி தொடா்ந்து மாா்கழி 29-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

விழாக்கான ஏற்பாடுகளை ஆரணி புதுக்காமூா், இராட்டிணமங்கலம், அக்ராபாளையம் பகுதி ஜெயின் சமுதாயத்தினா் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீ சங்கரா பகவதி கல்லூரி ஆண்டு விழா

பொத்தகாலன்விளையில் நீா்மோா் பந்தல் திறப்பு

திருச்செந்தூரில் மௌன சுவாமி குருபூஜை

பாபநாசம் தாமிரவருணி ஆற்றில் மூழ்கி சிறுவன் பலி

குவாரி உரிமையாளரிடம் ரூ.16 லட்சம் மோசடி: கேரள இளைஞா் கைது

SCROLL FOR NEXT