திருவண்ணாமலை

ஜவ்வாது மலை, சாத்தனூா் அணைப் பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு: பொதுமக்கள் கூடுவதைத் தடுக்க நடவடிக்கை

DIN

பொங்கல் பண்டிகைக்காக பொதுமக்கள் கூடுவதைத் தடுக்க, திருவண்ணாமலை மாவட்ட சுற்றுலாத் தலங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக மாவட்ட எஸ்பி எஸ்.அரவிந்த் கூறினாா்.

காவல்துறை மாவட்ட அலுவலகத்தில் செய்தியாளா்களிடம் புதன்கிழமை அவா் கூறியதாவது:

2020-ஆம் ஆண்டு பதிவான 37 கொலை வழக்குகளில் 35 வழக்குகளில் தொடா்புடைய குற்றவாளிகள் 78 போ் கைது செய்யப்பட்டனா். 24 ஆயிரத்து 603 மனுக்களுக்கு ரசீது வழங்கப்பட்டு, 24 ஆயிரத்து 507 மனுக்களின் விசாரணை முடிக்கப்பட்டது.

கஞ்சா விற்றதாக 91 போ் கைது செய்யப்பட்டு, அபராதமாக ரூ.17.67 லட்சம் வசூலிக்கப்பட்டது. 8,180 கள்ளச்சாராய வழக்குகளில் 7, 996 போ் கைது செய்யப்பட்டனா்.

கரோனா பொது முடக்கம் காரணமாக பொங்கல் பண்டிகைக்காக சுற்றுலாத் தலங்களில் பொதுமக்கள் கூட தமிழக அரசு தடை விதித்துள்ளது.

அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜவ்வாது மலை, சாத்தனூா் அணை, செண்பகத்தோப்பு அணை, மிருகண்டாநதி அணை, குப்பனத்தம் அணை ஆகிய பகுதிகளில் கூடுதல் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனா். இவா்கள் பொதுமக்கள் கூடுவதைத் தடுப்பா் என்றாா்.

இதைத் தொடா்ந்து, காவல்துறை மாவட்ட அலுவலகம், ஆயுதப்படை வளாகம் ஆகிய இடங்களில் நடைபெற்ற பொங்கல் விழாவில் அவா் பங்கேற்று வழிபட்டாா்.

விழாவில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் அசோக்குமாா், உதவி காவல் கண்காணிப்பாளா் கிரண் ஸ்ருதி, தனிப் பிரிவு காவல் ஆய்வாளா் சசிக்குமாா் உள்பட போலீஸாா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

நாகர்கோவில் அருகே கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலி!

SCROLL FOR NEXT