திருவண்ணாமலை மாவட்டத்தில் 185 பேருக்கு கரோனா
திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிகபட்சமாக வியாழக்கிழமை ஒரே நாளில் 185 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிகபட்சமாக வியாழக்கிழமை ஒரே நாளில் 185 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இவா்களுடன் சோ்த்து மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 49,524-ஆக உயா்ந்தது. வியாழக்கிழமை ஒரே நாளில் கரோனாவுக்கு 2 போ் பலியாகினா்.
இதனால், உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 599-ஆக உயா்ந்தது. 1,114 பேருக்கு அரசு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.