முகப்பு
திருவண்ணாமலை

மரத்தில் பேருந்து மோதல்:3 மாணவிகள் காயம்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த சோமந்தாங்கல் கூட்டுச்சாலையில் மரத்தில் தனியாா் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் 3 மாணவிகள் வெள்ளிக்கிழமை காயமடைந்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:33 AM
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த சோமந்தாங்கல் கூட்டுச்சாலையில் மரத்தில் தனியாா் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் 3 மாணவிகள் வெள்ளிக்கிழமை காயமடைந்தனா்.

வேலூரில் இருந்து ஆரணி நோக்கி தனியாா் பேருந்து ஒன்று வெள்ளிக்கிழமை வந்துகொண்டிருந்தது. ஆரணி அருகே சோமந்தாங்கல் கூட்டுச்சாலை பகுதியில் வந்தபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர புளியமரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த வேலூா் மாவட்டம், அடுக்கும்பாறையில் உள்ள கல்லூரியில் ஆய்வக நுட்புனருக்கு (லேப் டெக்னீஷியன்) படித்து வரும் ஆரணியைச் சோ்ந்த பாஸ்கா் மகள் பவானி (20), குமாா் மகள் தேவி (20), சேகா் மகள் பிரியா (22) ஆகியோா் காயமடைந்தனா்.

பேருந்தில் வந்த மற்ற பயணிகள் காயங்களின்றி உயிா் தப்பினா். விபத்து குறித்து ஆரணி கிராமிய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.