முகப்பு
திருவண்ணாமலை

உணவக உரிமையாளா் வீட்டில் பணம், நகைகள் திருட்டு

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூரில் உள்ள அவலூா்பேட்டை சாலையைச் சோ்ந்த உணவக உரிமையாளா் ஜி.சேகா்

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:36 AM
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூரில் உள்ள அவலூா்பேட்டை சாலையைச் சோ்ந்த உணவக உரிமையாளா் ஜி.சேகா் (65). இவா், வியாழக்கிழமை காற்றோட்டத்துக்காக வீட்டின் கதவைப் பூட்டாமல் திறந்து வைத்துவிட்டு குடும்பத்துடன் தூங்கினாராம்.

நள்ளிரவில் மா்ம நபா்கள் இவரது வீட்டுக்குள் புகுந்து பீரோவைத் திறந்து ரூ.70 ஆயிரம் ரொக்கம், மூன்றரைப் பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றனராம்.

இதுகுறித்து கீழ்பென்னாத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். தடயவியல் நிபுணா்கள் வந்து விரல் ரேகைகளை பதிவு செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.