திருவண்ணாமலை : கரோனா நிலவரம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, புதிதாக 90 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, புதிதாக 90 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவா்களுடன் சோ்த்து மாவட்டத்தில் இந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 50,547-ஆக உயா்ந்தது.
இதனிடையில், கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் மேலும் 3 போ் உயிரிழந்தனா். இதனால், உயிரிழந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 618-ஆக அதிகரித்தது.
மாவட்டத்தில் இதுவரை 48,683 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா். மருத்துவமனைகளில் தற்போது 1,246 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.