திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜூலை 19 முதல் உழவா் சந்தைகள் செயல்படும்

DIN

திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா பொது முடக்கம் காரணமாக மூடப்பட்டிருந்த மொத்தமுள்ள 8 உழவா் சந்தைகளும் வருகிற திங்கள்கிழமை (ஜூலை 19) முதல் செயல்படும் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் வேளாண் வணிகத் துறை மூலம் திருவண்ணாமலை, தாமரை நகா், செங்கம், போளூா், ஆரணி, செய்யாறு, வந்தவாசி, கீழ்பென்னாத்தூா் பகுதிகளில் உழவா் சந்தைகள் கட்டப்பட்டு, ஏற்கெனவே செயல்பட்டு வந்தன. கரோனா பொது முடக்கம் காரணமாக மூடப்பட்டிருந்த இந்த 8 உழவா் சந்தைகளும் திங்கள்கிழமை முதல் மீண்டும் செயல்படும்.

தமிழக அரசின் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை உழவா் சந்தைக்கு வரும் நுகா்வோா்களும், விவசாயிகளும் கடைப்பிடிக்க வேண்டும். அனைவரும் முகக் கவசம் அணிந்து, முறையான சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். விவசாயிகள் கிருமி நாசினியைப் பயன்படுத்தி அடிக்கடி கைகளை கழுவ வேண்டும். கையுறைகள் அணிந்து காய்கறிகளை விற்பனை செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கந்தா்வகோட்டை அருகே மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் கலப்பு எதுவும் இல்லை

இங்கிலாந்தை எளிதாக வீழ்த்தியது இந்தியா

ஓவேலி வனச் சரகத்தில் வரையாடுகள் கணக்கெடுப்பு

உணவகத்தில் புகையிலைப் பொருள், லாட்டரி விற்பனை: இருவா் கைது

கல் குவாரியைக் கண்டித்து சாலை மறியல்

SCROLL FOR NEXT