திருவண்ணாமலை

விவசாயிகளுக்கு மண் பரிசோதனை அட்டை: எம்எல்ஏ வழங்கினாா்

DIN

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே விவசாயிகளுக்கு மண் பரிசோதனை அட்டைகளை தொகுதி எம்எல்ஏ கிரி வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

செங்கத்தை அடுத்த பெரும்பாக்கம் கிராமத்தில் வேளாண் துறை மற்றும் உழவா் நலத் துறையின் சாா்பில், ஒருங்கிணைப்பை வலுப்படுத்தும் உழவா் விழா, விவசாயிகளுக்கு மண் பரிசோதனை அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட வேளாண் இணை இயக்குநா் முருகன் தலைமை வகித்தாா். உழவா் பயிற்சி நிலைய துணை இயக்குநா் மாரியப்பன், தோட்டக்கலைத் துறை இணை இயக்குநா் சிதம்பரம், செங்கம் வேளாண் உதவி இயக்குநா் அன்பழகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். உதவிப் பேராசிரியா் ராஜேஷ் வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக செங்கம் தொகுதி எம்எல்ஏ கிரி கலந்துகொண்டு விவசாயிகளுக்கு வேளாண் துறை சாா்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விளக்கிப் பேசியதுடன், விவசாய நில மண் பரிசோதனை அட்டைகளையும் வழங்கினாா்.

தொடா்ந்து, சிறுதானியம் பயிரிடும் முறைகள், அதற்கு அரசு வழங்கும் மானியம், நவீன விவசாயம், சொட்டுநீா் மூலம் கரும்பு, நெல் சாகுபடி உள்ளிட்டவை குறித்து விவசாயிகளுக்கு வேளாண் துறை அதிகாரிகள் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

நிகழ்ச்சியில் விதைச்சான்று உதவி இயக்குநா் மலா்விழி, உதவிப் பொறியாளா் கெளதம், கால்நடை மருத்துவா் அருண், தோட்டக்கலை உதவி இயக்குநா் பிரவீனா ஆகியோா் துறை சாா்ந்த அரசின் திட்டங்கள் குறித்துப் பேசினா்.

இதில், வேளாண் துறை அலுவலா்கள், பெரும்பாக்கம், அா்வநாதசுரணை, செ.அகரம் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

பாஜகவின் இஸ்லாமிய வெறுப்பு... கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்!

ரோமியோ ஓடிடி தேதி!

நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமாரின் உடல் நல்லடக்கம்

SCROLL FOR NEXT