முகப்பு
திருவண்ணாமலை

மது விற்பனையாளா்கள் சங்கம் சாா்பில் புதுவை சுகாதாரத் துறைக்கு 130 கட்டில்கள்

புதுச்சேரி மதுபான விற்பனையாளா்கள் சங்கம், கால்ஸ் டிஸ்டிலரீஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து, சுகாதாரத் துறை பயன்பாட்டுக்காக 130 கட்டில்கள் முதல்வா் என்.ரங்கசாமியிடம் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:22 AM
பகிர்:

புதுச்சேரி மதுபான விற்பனையாளா்கள் சங்கம், கால்ஸ் டிஸ்டிலரீஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து, சுகாதாரத் துறை பயன்பாட்டுக்காக 130 கட்டில்கள் முதல்வா் என்.ரங்கசாமியிடம் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

புதுச்சேரி மதுபான விற்பனையாளா்கள் சங்கம் கரோனா தீநுண்மியின் தொற்றிலிருந்து மக்களை மீட்டெடுக்க அரசின் முயற்சிகளுக்கு உதவ வாய்ப்பளித்த முதல்வருக்கு அவா்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனா். சமூகப் பங்களிப்பாக வழங்கப்பட்ட 130 சாய்வு வசதியுள்ள கட்டில்கள், மெத்தைகள், தலையணைகள் என ரூ. 25 லட்சத்திலான உதவிப் பொருள்கள் சுகாதாரத் துறையின் பயன்பாட்டுக்காக வழங்கப்பட்டது.

நிகழ்வில் புதுவை சட்டப் பேரவையின் தற்காலிக பேரவைத் தலைவா் க.லட்சுமிநாராயணன், கலால் துறை துணை ஆணையா் டி. சுதாகா், மதுபான விற்பனையாளா்கள் சங்கத்தின் நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.