திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் ரூ.5,800 கோடி கடன் வழங்க இலக்கு: மாவட்ட ஆட்சியா் தகவல்

DIN

திருவண்ணாமலை மாவட்டத்தில் 2021-2022 நிதியாண்டில் ரூ.5,800 கோடிக்கு கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி தெரிவித்தாா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 2021-2022 ஆம் ஆண்டுக்கான கடன் திட்ட அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்தியன் வங்கியின் மண்டல மேலாளா் டி.எஸ்.மூா்த்தி தலைமை வகித்தாா். நபாா்டு வங்கி உதவிப் பொது மேலாளா் வி.ஸ்ரீராம், மகளிா் திட்ட இயக்குநா் சந்திரா, தாட்கோ மாவட்ட மேலாளா் ஏழுமலை ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி 2021-2022 ஆம் ஆண்டுக்கான வருடாந்திர கடன் திட்ட அறிக்கையை வெளியீட்டுப் பேசினாா்.

அப்போது அவா், திருவண்ணாமலை மாவட்டத்தில் 2021-2022 நிதியாண்டுக்கான வருடாந்திர கடன் திட்டத்தில் ரூ.5,800 கோடி கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

அனைத்துத் தரப்பு மக்களின் வளா்ச்சியை கருத்தில் கொண்டும், குறிப்பாக விவசாயத்துக்கு முன்னுரிமை வழங்கியும் இந்த வருடாந்திர கடன் திட்டம் உருவாக்கப்பட்டது என்றாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் ரா.மணிராஜ், உதவி ஆட்சியா் (பயிற்சி) கட்டா ரவி தேஜா மற்றும் அரசு அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வடதமிழகத்தில் இன்று முதல் 109 டிகிரி வெயில் சுட்டெரிக்கும்

கேலிக்காளாகும் ஜனநாயகம்!

ராஜ‌‌ஸ்​தா​னி‌ல் ஒரே க‌ல்லில் 18 அடி உயர காளி சிலை வடி‌ப்பு

மனித சக்தியைப் பாடிய பாவேந்தர்!

ராமா் திருக்கல்யாண வைபவம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

SCROLL FOR NEXT