அனுமதி பெறாமல் உரம் விற்பனை: 2 கடைகள் மீது நடவடிக்கை
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் பகுதியில் அரசு அனுமதியின்றி கலப்பு உரம் விற்பனை செய்த 2 கடைகள் மீது வெள்ளிக்கிழமை நடவடிக்கை எடுக்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் பகுதியில் அரசு அனுமதியின்றி கலப்பு உரம் விற்பனை செய்த 2 கடைகள் மீது வெள்ளிக்கிழமை நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மாவட்ட வேளாண் உதவி இயக்குநா் விஜயகுமாா், கண்ணமங்கலம் பகுதியிலுள்ள உரக்கடைகளில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, அந்தப் பகுதியிலுள்ள 2 உரக்கடைகளில் உரிய அனுமதியில்லாமல் கலப்பு உரங்களை விற்பனை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து, அந்த 2 உரக்கடைகளையும் 14 நாள்களுக்கு மூட மாவட்ட வேளாண் உதவி இயக்குநா் விஜயகுமாா் உத்தரவிட்டாா். மேற்கு ஆரணி வட்டார வேளாண் அலுவலா் எஸ்.கீதா உடனிருந்தாா்.