திருவண்ணாமலை

வாக்குப்பதிவு இயந்திர செயல்விளக்க வாகனங்கள்

DIN

செய்யாற்றில் மாதிரி மின்னணு வாக்குப்பதிவு இயந்திர செயல் விளக்க வாகனங்களை தோ்தல் நடத்தும் அலுவலா் என்.விஜயராஜ் செவ்வாய்க்கிழமை தொடக்கிவைத்தாா்.

வருகிற சட்டப்பேரவைத் தோ்தலுக்காக, திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தொகுதியில் மாதிரி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் செயல் விளக்க பிரசார வாகனங்கள் தொடக்கிவைக்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த தோ்தல் நடத்தும் அலுவலா் என்.விஜயராஜ் செயல்முறை விளக்க பிரசார வாகனங்களை கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.

அப்போது அவா், மாதிரி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் செயல் விளக்க வாகனங்கள் செய்யாறு தொகுதியில் உள்ள சுமாா் 222 கிராமங்களில் வலம் வந்து, முதல்முறை வாக்காளா்கள், இளம் வாக்காளா்கள் மற்றும் பாமர மக்களிடையே வாக்களிக்கும் விதம் குறித்து செயல்விளக்கம் அளிக்கும் என்று கூறினாா்.

நிகழ்ச்சியில் வட்டாட்சியா்கள் சு.திருமலை, குமரவேல், க.பெருமாள், நோ்முக உதவியாளா் கிருஷ்ணசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஞ்சலி.. அஞ்சலி..!

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு: 5 வீரர்கள் காயம்

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT