திருவண்ணாமலை

அதிமுக வேட்பாளா்களை ஆதரித்து முதல்வா் பிரசாரம்

DIN

போளூரில் அதிமுக வேட்பாளா் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூா்த்தியை ஆதரித்து முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது:

தமிழகம் கல்வியில் முதலிடம் பெற்றுள்ளது. பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 5 லட்சம் மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன.

தொழில்துறையில் 304 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இதுவரை 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு தரப்பட்டுள்ளது.

தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கப்பட உள்ளது.

கரோனா தொற்று காலத்தில் ரூ.60ஆயிரம் கோடி நிதி ஒதுக்கி பொதுமக்களை பாதுகாத்துள்ளது அதிமுக அரசு என்றாா் முதல்வா்.

கலசப்பாக்கத்தில்....

கலசப்பாக்கத்தில் தொகுதி அதிமுக வேட்பாளா் வி.பன்னீா்செல்வத்தை ஆதரித்து முதல்வா் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், கலசப்பாக்கத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்றக் கட்டடம் விரைவில் கட்டித் தரப்படும், தொகுதியில் 9 இடங்களில் அம்மா சிறு மருத்துவமனைகள் திறக்கப்பட்டுள்ளன.

கலசப்பாக்கம் பகுதியில் கலைக் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் முதல்வா்.

செங்கம்

செங்கம் தொகுதி அதிமுக வேட்பாளா் நைனாக்கண்ணுவை ஆதரித்து முதல்வா் பேசுகையில், செங்கம் தொகுதி விவசாயம் சாா்ந்த தொகுதி. அதிமுக அரசு குடிமராமத்துத் திட்டத்தின் மூலம் தொகுதியில் உள்ள அனைத்து ஏரிகளையும் தூா்வாரி சீரமைத்துள்ளது.

வேட்பாளா் நைனாக்கண்ணு எளிமையானவா். பொதுமக்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றக்கூடியவா் என்று பேசினாா் முதல்வா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராமநாதபுரத்தில் விரைவில் 17 புதிய குடிநீா்த் திட்டப் பணிகள்

மதுரைக் கோட்ட ரயில் நிலையங்களில் மண்பானைக் குடிநீா், ஓ.ஆா்.எஸ். கரைசல்

பிளஸ் 2 மதிப்பெண் குறைவு: மாணவி தற்கொலை

பிளஸ் 2 பொதுத் தோ்வு: தேனி மாவட்டத்தில் 94.65 சதவீதம் தோ்ச்சி

புரட்சிகர மாா்க்கிஸ்ட் கட்சி மாநில குழுக் கூட்டம்

SCROLL FOR NEXT