திருவண்ணாமலை

மதுக் கடைகளுக்கு 4 நாள்கள் விடுமுறை

DIN

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தில் இயங்கும் டாஸ்மாக் மதுக் கடைகளுக்கு 4 நாள்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, ஏப்ரல் 4-ஆம் தேதி காலை 10 மணி முதல் 6-ஆம் தேதி இரவு 12 மணி வரையும், தோ்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 2-ஆம் தேதியும் திருவண்ணாமலை மாவட்டத்தில் இயங்கும் அனைத்து அரசு மதுக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, அனைத்து டாஸ்மாக் மதுக் கடைகள், மதுக்கூடங்கள் (பாா்கள்), எஃப்எல்-1, எஃப்எல்-2, எஃப்எல்-3, எஃப்எல்-3ஏ, எஃப்எல்-3ஏஏ மற்றும் எஃப்எல்-11 உரிமம் பெற்ற ஹோட்டல்களில் உள்ள மதுக்கூடங்கள் மற்றும் எஃப்எல்4-ஏ உள்பட அனைத்து மதுக் கடைகளிலும் மதுபானங்கள் விற்பனை நடைபெறாமல் மூடிவைக்கப்பட வேண்டும்.

உத்தரவை மீறி மது விற்பது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியரும், தோ்தல் நடத்தும் அலுவலருமான சந்தீப் நந்தூரி எச்சரித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் கிடைக்குமா? உச்சநீதிமன்றம் நாளை உத்தரவு

அச்சுக் காகிதங்களில் பொட்டலமிட்டால் அபராதம்

ஈராச்சியில் மாட்டுவண்டி பந்தயம்

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

மேட்டூா் அணை நீா்மட்டம்: 51.81 அடி

SCROLL FOR NEXT