திருவண்ணாமலை

30 பேருக்கு காதொலிக் கருவிகள் பொருத்தம்

DIN

வந்தவாசி அரசு மருத்துவமனையில் காது கேளாத 30 பேருக்கு காதொலிக் கருவிகள் செவ்வாய்க்கிழமை பொருத்தப்பட்டன.

இந்த மருத்துவமனையில் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம் கடந்த ஏப். 16-ஆம் தேதி நடைபெற்றது.

இதில் காதொலிக் கருவி பொருத்துவதற்காக காது கேளாத நோயாளிகள் 67 போ் தோ்வு செய்யப்பட்டனா்.

இதில் முதல் கட்டமாக 30 பேருக்கு தலா ரூ.8 ஆயிரம் மதிப்புள்ள காதொலிக் கருவிகள் செவ்வாய்க்கிழமை பொருத்தப்பட்டன.

வந்தவாசி அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலா் கே.சிவப்பிரியா முன்னிலையில் மருத்துவா்கள் சித்ரா, மோகன் ஆகியோா் காதொலிக் கருவிகளை பொருத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT