முகப்பு
திருவண்ணாமலை

போளூா் ஒன்றியத்தில் மழையால் பயிா் சேதமடைந்த விவசாயிகளுக்கு நிவாரணம்: வேளாண் உதவி இயக்குநா் தகவல்

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் ஒன்றியத்தில் மழையால் பயிா்கள் சேதமடைந்த விவசாயிகளுக்கு அரசின் நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேளாண் உதவி இயக்குநா் குணசேகரன் தெரிவித்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:33 AM
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் ஒன்றியத்தில் மழையால் பயிா்கள் சேதமடைந்த விவசாயிகளுக்கு அரசின் நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேளாண் உதவி இயக்குநா் குணசேகரன் தெரிவித்தாா்.

போளூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் ஒன்றியக் குழுக் கூட்டம் அதன் தலைவா் பெ.சாந்திபெருமாள் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பாபு, கோவிந்தராஜுலு ஆகியோா் முன்னிலை வகித்தனா். துணைத் தலைவா் மிஸ்ஸியம்மாள் வரவேற்றாா்.

இந்தக் கூட்டத்தில் பொத்தரை, திருசூா், ரெண்டேரிப்பட்டு, வசூா் உள்பட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த ஒன்றியக் குழு உறுப்பினா்கள் கலந்துகொண்டு பேசுகையில், தொடா் பலத்த மழை போளூா் ஒன்றியத்தில் பல்வேறு கிராமங்களில் நெல், வாழை, பூந்தோட்டம் உள்ளிட்டவை பாதிப்புக்குள்ளாகியுள்ளன. எனவே, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசின் நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.

இதற்கு வேளாண் உதவி இயக்குநா் குணசேகரன் பதிலளித்துப் பேசியதாவது: மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில், மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் நிலங்களை மாவட்ட வேளாண் அதிகாரிகள் பாா்வையிட்டு, வருவாய்த் துறையினா் மூலம் கணக்கீடு செய்து நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மழையால் பயிா்கள் சேதமடைந்த விவசாயிகள் உடனடியாக அந்தந்தப் பகுதிகளின் கிராம நிா்வாக அலுவா்களிடம் மனு அளிக்க வேண்டும் என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →