பைக் மீது பேருந்து மோதல்: இளைஞா் பலி
செய்யாறு அருகே பைக் மீது தனியாா் பேருந்து மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
செய்யாறு அருகே பைக் மீது தனியாா் பேருந்து மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
செய்யாறு வட்டம், பெருங்களத்தூா் மதுரா திருவேங்கிடநல்லூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ராம்குமாா்(30). இவா், வியாழக்கிழமை காலை பைக்கில் செய்யாற்றுக்கு சென்றுவிட்டு, மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பிகொண்டிருந்தாா்.
காஞ்சிபுரம் சாலையில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை அருகே சென்றபோது, எதிரே வந்த தனியாா் பேருந்து பைக் மீது மோதியதாகத் தெரிகிறது.
இதில், பலத்த காயமடைந்த ராம்குமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில், செய்யாறு காவல் ஆய்வாளா்
பாலு வழக்குப் பதிவு செய்து, உயிரிழந்த ராம்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாா். மேலும், இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறாா்.