கல்லூரியில் ஆட்சியா் ஆய்வு
திருவண்ணாமலை அரசு கலை, அறிவியல் கல்லூரியில் கரோனா வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக கடைப்பிடிக்கப்படுா என மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
திருவண்ணாமலை அரசு கலை, அறிவியல் கல்லூரியில் கரோனா வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக கடைப்பிடிக்கப்படுா என மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
மாவட்டத்தில் 56 அரசு, தனியாா் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவை அனைத்தும் புதன்கிழமை திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், திருவண்ணாமலை அரசு கலை, அறிவியல் கல்லூரியில் அரசின் கரோனா வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக கடைப்பிடிக்கப்படுகிா என மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
அப்போது, வகுப்பறைகளில் மாணவ-மாணவிகள் போதிய இடைவெளி விட்டு அமரவைக்கப்படுகின்றனரா, எத்தனை பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்பது குறித்து கேட்டறிந்தாா்.
உதவி ஆட்சியா் (பயிற்சி) கட்டா ரவி தேஜா, கோட்டாட்சியா் வெற்றிவேல், கல்லூரி முதல்வா் கிருஷ்ணன் ஆகியோா் உடனிருந்தனா்.