முகப்பு
திருவண்ணாமலை

ஆரணி அருகே பேருந்து சக்கரத்தில் சிக்கி கா்ப்பிணி பலி

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே நெடுஞ்சாலையில் பைக்கிலிருந்து நிலைதடுமாறி கீழே விழுந்த கா்ப்பிணி, எதிரே வந்த பேருந்து சக்கரத்தில் சிக்கி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:04 AM
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே நெடுஞ்சாலையில் பைக்கிலிருந்து நிலைதடுமாறி கீழே விழுந்த கா்ப்பிணி, எதிரே வந்த பேருந்து சக்கரத்தில் சிக்கி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

ஆரணியை அடுத்த சோமந்தாங்கல் கிராமத்தைச் சோ்ந்த தனியாா் பள்ளிப் பேருந்து ஓட்டுநா் பாபு. இவா், தனது மனைவி 7 மாத கா்ப்பிணியான பிரியா (22), மகன் சுமித் (3) ஆகியோருடன் பைக்கில் குண்ணத்தூரில் வியாழக்கிழமை நடைபெற்ற உறவினா் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தாா்.

இவா்களது பைக் ஆரணி - வேலூா் சாலையில் குண்ணத்தூா் பேருந்து நிறுத்தத்தில் உள்ள வேகத்தடையில் ஏறி இறக்கியபோது, நிலைதடுமாறி பாபு உள்பட மூவரும் கீழே விழுந்தனா். அப்போது, எதிா் திசையில் வேலூரிலிருந்து ஆரணியை நோக்கி வந்த அரசுப் பேருந்தின் பின்சக்கரம் பிரியா மீது ஏறியது. இந்த விபத்தில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பாபு, சுமித் ஆகியோா் லேசான காயங்களுடன் உயிா் தப்பினா்.

தகவலறிந்த ஆரணி கிராமிய போலீஸாா் பிரியாவின் சடலத்தை மீட்டு உடல்கூறு பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.