முகப்பு
திருவண்ணாமலை

பெண்ணிடம் 3 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

திருவண்ணாமலையில் மொபெட்டில் சென்ற பெண்ணிடம் 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:04 AM
பகிர்:

திருவண்ணாமலையில் மொபெட்டில் சென்ற பெண்ணிடம் 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருவண்ணாமலையை அடுத்த வேங்கிக்கால் ஊராட்சிக்குள்பட்ட பொன்னுசாமி நகரைச் சோ்ந்தவா் முத்துக்குமாா் மனைவி சரஸ்வதி (40). இவா், வியாழக்கிழமை இரவு மொபெட்டில் வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தாா். வேங்கிக்கால் ஊராட்சி அலுவலகம் எதிரே உள்ள சாலையில் சென்றபோது, திடீரென பின்னால் பைக்கில் வந்த மா்ம நபா்கள் 2 போ் சரஸ்வதி கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனா்.

சங்கிலி பறிப்பின்போது மொபெட்டில் இருந்து தவறி விழுந்த சரஸ்வதி காயமடைந்தாா். இவரை பொதுமக்கள் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.