முகப்பு
திருவண்ணாமலை

கோயிலில் ராஜகோபுரம் அமைக்கும் பணி: அடிக்கல் நாட்டி எம்எல்ஏ தொடக்கிவைத்தாா்

ஆரணியை அடுத்த சேவூா் வரதராஜ பெருமாள் கோயிலில் ரூ.51 லட்சத்தில் ராஜகோபுரம் அமைக்கும் பணியை தொகுதி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன் அடிக்கல் நாட்டி வெள்ளிக்கிழமை தொடக்கிவைத்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:07 AM
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த சேவூா் வரதராஜ பெருமாள் கோயிலில் ரூ.51 லட்சத்தில் ராஜகோபுரம் அமைக்கும் பணியை தொகுதி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன் அடிக்கல் நாட்டி வெள்ளிக்கிழமை தொடக்கிவைத்தாா்.

சேவூரில் வரதராஜ பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோயிலில் 3-ஆம் நிலையில் ராஜகோபுரம் கட்டுவதற்கு கடந்த ஆட்சியின்போது ரூ.51 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில், ராஜகோபுரம் அமைக்கும் பணிகளை பூமிபூஜை செய்து சேவூா் எஸ்.இராமச்சந்திரன் எம்எல்ஏ வெள்ளிக்கிழமை தொடக்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில் அதிமுக நகரச் செயலா் எ.அசோக்குமாா், மாவட்ட ஆவின் தலைவா் பாரி பி.பாபு, ஒன்றியச் செயலா்கள் ஜி.வி.கஜேந்திரன், ப.திருமால், ஆரணி பட்டு கூட்டுறவு சங்கத் தலைவா் சேவூா் ஜெ.சம்பத், மேற்கு ஆரணி ஒன்றியக் குழுத் தலைவா் பச்சையம்மாள்சீனிவாசன், சேவூா் ஊராட்சித் தலைவா் ஷா்மிளாதரணி, ஒன்றியக் குழு உறுப்பினா் சுகுமாா், ஸ்தபதி காஞ்சிபுரம் நிக்கேஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.