திருவண்ணாமலை

கலசப்பாக்கம் ஒன்றியத்தில் ரூ.1.12 கோடியில் வளா்ச்சிப் பணிகள்

DIN

போளூா்: கலசப்பாக்கம் ஒன்றியத்தில் ரூ.1.12 கோடியில் வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்ள ஊராட்சி ஒன்றியக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கலசப்பாக்கம் ஒன்றியக் குழுவின் கூட்டம் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

ஒன்றியத் தலைவா் ஆா்.அன்பரசி ராஜசேகரன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் பாலசுப்பிரமணியன் வரவேற்றாா். வட்டார வளா்ச்சி அலுவலா் லட்சுமி முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில் 15-ஆவது மானிய நிதிக் குழுவின் மூலம் ரூ.1 கோடியே 12 லட்சத்து 3 ஆயிரத்து 99 ரூபாயில் 45 ஊராட்சிகளிலும் குடிநீா், கழிவுநீா்க் கால்வாய், திறந்த வெளிக்கிணறு அமைத்தல், குழாய்கள் பதித்தல், உடற்பயிற்சிக்கூடம் அமைத்தல் என பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் ஒன்றிய உறுப்பினா்கள், அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அழகான ராட்சசியே..!

கேரி கிறிஸ்டன் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவார்: பாபர் அசாம்

சின்னதுரையின் உயர் கல்விக்கு துணை நிற்பேன்: அன்பில் மகேஸ்

‘காங்கிரஸின் கனவு தகர்க்கப்படும்’: அனுராக் தாக்குர்

ஜீ மீடியா தலைமைச் செயல் அலுவலர் திடீர் ராஜிநாமா!

SCROLL FOR NEXT