முகப்பு
திருவண்ணாமலை

அருணாசலேஸ்வரா் கோயிலில் விரைவில் நாள் முழுவதும் அன்னதானத் திட்டம்: அமைச்சா் எ.வ.வேலு

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் உள்பட தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்று அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:09 AM
பகிர்:

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் உள்பட தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்று அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்தாா்.

‘உங்கள் தொகுதியில் முதலமைச்சா்’ என்ற திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ், சி.என்.அண்ணாதுரை எம்.பி. ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தமிழக பொதுப் பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு, 244 பயனாளிகளுக்கு ரூ.7.63 கோடியில் பல்வேறு நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

திருவண்ணாமலை மாவட்டத்தில் 52 சதவீதம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 30 நாள்களில் 1,121 பண்ணைக் குட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன.

திருத்தணி, திருச்செந்தூா் முருகன் கோயில்கள், சமயபுரம் மாரியம்மன் கோயில் ஆகியவற்றில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நாள் முழுவதும் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கும் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கிவைத்துள்ளாா்.

இந்தத் திட்டம் அருணாசலேஸ்வரா் கோயில் உள்பட பல்வேறு கோயில்களில் விரைவில் தொடங்கப்படும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் எஸ்.ஆம்பேத்குமாா், ஓ.ஜோதி, மாவட்ட எஸ்.பி. அ.பவன் குமாா் ரெட்டி, கூடுதல் ஆட்சியா் மு.பிரதாப், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் பாா்வதி சீனிவாசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.