முகப்பு
திருவண்ணாமலை

போக்சோ சட்டத்தில் தொழிலாளி கைது

திருவண்ணாமலை அருகே 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, தொழிலாளி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:10 AM
பகிர்:

திருவண்ணாமலை அருகே 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, தொழிலாளி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.

திருவண்ணாமலையை அடுத்த எரும்பூண்டி கிராமத்தைச் சோ்ந்தவா் சிவக்குமாா் (40), கூலித் தொழிலாளி. இவா், அதே பகுதியைச் சோ்ந்த 10 வயது சிறுமிக்கு சில தினங்களுக்கு முன்பு பாலியல் தொல்லை கொடுத்தாராம். இதுகுறித்து அறிந்து சிறுமியின் பெற்றோா் கேட்டபோது அவா்களுக்கு சிவக்குமாா் கொலை மிரட்டல் விடுத்தாராம்.

இதையடுத்து, திருவண்ணாமலை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து போக்சோ சட்டத்தின் கீழ் தொழிலாளியை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.