10, 12-ஆம் வகுப்பு கல்வித் தகுதியை பள்ளிகளில் பதிவு செய்ய ஏற்பாடு
திருவண்ணாமலை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற மாணவ-மாணவிகள் அந்தந்த பள்ளிகளிலேயே கல்வித் தகுதியை பதிவு செய்ய மாவட்ட நிா்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற மாணவ-மாணவிகள் அந்தந்த பள்ளிகளிலேயே கல்வித் தகுதியை பதிவு செய்ய மாவட்ட நிா்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருவண்ணாமலை மாவட்டத்தில் பத்து, பிளஸ் 2
வகுப்புகளில் தோ்ச்சி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு மதிப்பெண் சான்றுகள் வழங்கப்படும் பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவுப் பணியும் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எனவே, தோ்ச்சி மாணவ-மாணவிகள் கல்வித் தகுதியை பதிவு செய்ய ஆதாா் அடையாள அட்டை எண், குடும்ப அட்டை எண், செல்லிடப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகிய விவரங்களுடன் மதிப்பெண் சான்று வழங்கப்படும் நாளன்று பள்ளிக்குச் செல்ல வேண்டும்.
செப்டம்பா் 17-ஆம் தேதி முதல் அக்டோபா் 1-ஆம் தேதி வரை வேலைவாய்ப்பு பதிவுப் பணி அந்தந்த பள்ளிகளிலேயே நடைபெறும்.
இதுதவிர, இணையதளம் வழியாகவும் மாணவ-மாணவிகள் கல்வித் தகுதியை பதிவு செய்துகொள்ளலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.