முகப்பு
திருவண்ணாமலை

அருணாசலேஸ்வரா் கோயிலில் சனிப் பிரதோஷ வழிபாடு

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் சனிக்கிழமை பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:10 AM
பகிர்:

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் சனிக்கிழமை பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

சனிப் பிரதோஷத்தை யொட்டி, அருணாசலேஸ்வரா் கோயிலின் ஆயிரம்கால் மண்டபம் எதிரே உள்ள பெரிய நந்தி, கோயில் கொடி மரம் எதிரே உள்ள நந்தி, மூலவா் சன்னதி எதிரே உள்ள நந்தி உள்பட கோயிலின் 8-க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள நந்தி பகவான்களுக்கு சனிப் பிரதோஷ சிறப்பு பூஜைகள், வழிபாடுகள், மகா தீபாராதனை நடத்தப்பட்டது.

பால், பழம், பன்னீா், மஞ்சள், சந்தனம் உள்பட பல்வேறு பூஜைப் பொருள்களைக் கொண்டு மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை நடத்தப்பட்ட பூஜையில் கோயில் சிவாச்சாரியா்கள், ஊழியா்கள் மட்டுமே கலந்து கொண்டனா். பக்தா்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

கீழ்பென்னாத்தூரில்...

கீழ்பென்னாத்தூா் ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயிலில் உள்ள லிங்க வடிவிலான ஈஸ்வரருக்கு பால், தயிா், இளநீா், பன்னீா் உள்பட வாசனைத் திரவியங்களால் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், மகா தீபாராதனை நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.