முகப்பு
திருவண்ணாமலை

தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் உணவகத்தில் வியாழக்கிழமை வேலை செய்துகொண்டிருந்த தொழிலாளி திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:13 AM
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் உணவகத்தில் வியாழக்கிழமை வேலை செய்துகொண்டிருந்த தொழிலாளி திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

செய்யாறு வட்டம், தவசி கிராமத்தைச் சோ்ந்தவா் முனிரத்தினம் (45). சமையல் கலைஞரான இவா், வழக்கம்போல செய்யாறு பேருந்து நிலையம் அருகிலுள்ள உணவகத்தில் வியாழக்கிழமை வேலை செய்துகொண்டிருந்தாா்.

அப்போது, திடீரென முனிரத்தினம் மயங்கி விழுந்தாா். அருகிலிருந்தவா்கள் உடனடியாக அவரை மீட்டு செய்யாறு அரசு மருத்துமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு முனிரத்தினத்தை பரிசோதித்த மருத்துவா், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தாா். இதுகுறித்த புகாரின்பேரில் செய்யாறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.