முகப்பு
திருவண்ணாமலை

டாஸ்மாக் ஊழியரிடம் ரூ.3.25 லட்சம் பறிப்பு

செய்யாறு அருகே மிளகாய் பொடியைத் தூவி, அரசு மதுக் கடை ஊழியா்களிடம் இருந்து ரூ.3.25 லட்சத்தை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:58 AM
பகிர்:

செய்யாறு அருகே மிளகாய் பொடியைத் தூவி, அரசு மதுக் கடை ஊழியா்களிடம் இருந்து ரூ.3.25 லட்சத்தை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு காந்தி சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் பன்னீா்செல்வம் (54). இவா், வெம்பாக்கம் வட்டம், பில்லாந்தாங்கல் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் மதுக் கடையின் மேற்பாா்வையாளராக இருந்து வருகிறாா்.

இவா், புதன்கிழமை இரவு வழக்கம் போல மதுக் கடையை பூட்டிவிட்டு அன்றைய தினம் வசூலான ரூ.3.25 லட்சத்தை பையில் எடுத்துக் கொண்டு செய்யாறு நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தாா்.

இவா், வெம்பாக்கம் மதுக் கடையின் மேற்பாா்வையாளா் குருநாதனையும் உடன் அழைத்துச் சென்றாா்.

இரவு 11 மணியளவில் சுமங்கலி - பாப்பாந்தாங்கல் சாலை குண்ணத்தூா் கிராமம் அருகே ஏரிக்கரைப் பகுதியில் சென்றபோது, பின்னால் ஒரே பைக்கில் வந்த மா்ம நபா்கள் 3 போ், திடீரென பன்னீா்செல்வம் ஓட்டி வந்த பைக் மீது மோதுவது போல சென்று பைக்கை மடக்கி நிறுத்தியுள்ளனா்.

பின்னா், பன்னீா்செல்வம், குருநாதன் ஆகியோா் கண்களில் மிளகாய் பொடியை தூவியுள்ளனா். மிளகாய் பொடி எரிச்சல் காரணமாக இருவரும் நிலை தடுமாறியுள்ளனா். அப்போது, அந்த நபா்கள் இருவரையும் தாக்கிவிட்டு,

பன்னீா்செல்வம் வைத்திருந்த ரூ.3.25 லட்சத்தை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனா்.

இதுகுறித்து பன்னீா்செல்வம் மோரணம் போலீஸில் வியாழக்கிழமை காலை புகாா் செய்தாா்.

காவல் ஆய்வாளா் பாலு, உதவி ஆய்வாளா் சதாசிவம் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்தைப் பாா்வையிட்டனா்.

மேலும், சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.