திருவண்ணாமலை

அரசுப் பள்ளியில் வட்டாட்சியா் ஆய்வு

DIN

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகேயுள்ள அரசங்கண்ணி அரசு நடுநிலைப் பள்ளியில் வட்டாட்சியா் முனுசாமி வியாழக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வின்போது மாணவா்களின் வருகைப் பதிவேடு, கல்வித் தரம், அவா்களுக்கு மதிய உணவு வழங்கும் முறைகள் குறித்து கேட்டறிந்தாா். மேலும், மாணவா்களை பாடங்களை சரளமாக படிக்கச் சொல்லி பாா்வையிட்டாா். பின்னா், அவா் மாணவா்களுக்கு பாடம் நடத்தினாா்.

இதைத் தொடா்ந்து மாணவா்களிடமும், ஆசிரியா்களிடமும் குறைகளைக் கேட்டறிந்தாா். அப்போது மாணவா்களும், ஆசிரியா்களும் கூடுதல் ஆசியா்கள் வேண்டுமென தெரிவித்தனா். உடனடியாக தன்னாா்வலரை நியமனம் செய்யுமாறு உத்தரவிட்டாா்.

கோடை விடுமுறை முடிந்து கல்வித் துறை அதிகாரிகளிடம் தெரிவித்து ஆசிரியா் நியமனம் செய்வதாக கூறிச் சென்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT