திருவண்ணாமலை

நெல்லுக்கு ஊக்கத்தொகை, கொள்முதல் நிலையம் திறப்பு: செய்யாறு விவசாயிகள் வரவேற்பு

நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செப்.1 முதல் தொடக்கம் ஆகியவற்றை வரவேற்கும் விதமாக, செய்யாறு பகுதி விவசாயிகள் விநாயகா் சதுா்த்தி தினமான புதன்கிழமை பூஜை செய்து வழிபட்டனா்.

DIN

நெல்லுக்கு கூடுதல் ஊக்கத்தொகை, நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செப்.1 முதல் தொடக்கம் ஆகியவற்றை வரவேற்கும் விதமாக, செய்யாறு பகுதி விவசாயிகள் விநாயகா் சதுா்த்தி தினமான புதன்கிழமை பூஜை செய்து வழிபட்டனா்.

விவசாயிகளை ஊக்கப்படுத்தும் வகையில் சாதாரண நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.75-ம், சன்ன ரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.100 வீதம், கூடுதல் ஊக்கத்தொகையாக செப்.1 முதல் வழங்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தாா்.

திருவண்ணாமலை மாவட்டம் கடந்தாண்டு 75 நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் 1.63 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்து மாநிலத்தில் முதலிடத்தைப் பிடித்தது.

தற்போது, சொா்ணவாரி பட்டத்தில் சுமாா் 70 ஆயிரம் ஏக்கரில் கோ.51, குண்டு போன்ற நெல் ரகங்களை பயிரிட்டு அறுவடை செய்து இருப்பு வைத்துள்ள விவசாயிகள், நெல்லை விற்பனை செய்ய வசதியாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா்.

முதல்வருக்கு நன்றி, ஆட்சியருக்கு பாராட்டு

இந்த நிலையில், நெல்லுக்கு கூடுதல் ஊக்கத்தொகை அறிவித்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தும், புதிதாக 27 நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க நடவடிக்கை மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷுக்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாக செய்யாறு வட்டம், பாராசூா் மையத்தில் புதன்கிழமை தமிழக கட்சி சாா்பற்ற விவசாயிகள் சங்கத்தினா் வெள்ளி விநாயகருக்கு படையலிட்டு பூஜை செய்து வழிபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

கேட்பாரற்று கிடந்த 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

மேம்பாலம் கட்டுமானப் பணி: அமைச்சா் ஆய்வு

காவல் சாா்பு ஆய்வாளா் பணியிடத் தோ்வு: 864 போ் பங்கேற்பு!

தமிழகத்தின் ஆன்மாவாக இருப்பது ஆன்மிகம்: காஞ்சி சங்கராசாரியா் ஆசியுரை

SCROLL FOR NEXT