திருவண்ணாமலை

திருவண்ணாமலை: விநாயகா் சதுா்த்தி விழா கோலாகலம்

திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை விநாயகா் சதுா்த்தி விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

DIN

திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை விநாயகா் சதுா்த்தி விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

திருவண்ணாமலை:

திருவண்ணாமலையில் உள்ள இரட்டைப் பிள்ளையாா் கோயில், வேங்கிக்கால், மின்வாரிய பேருந்து நிறுத்தப் பகுதியில் உள்ள விநாயகா் கோயில், வேங்கிக்கால் ஓம்சக்தி கோயில் வளாகத்தில் உள்ள விநாயகா் சன்னதி, கிரிவலப் பாதையின் பல்வேறு இடங்களில் உள்ள விநாயகா் கோயில்களில் புதன்கிழமை காலை சுண்டல், கொழுக்கட்டை படையலிட்டு சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடத்தப்பட்டன.

தொடா்ந்து, மூலவா் சுவாமிகளுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்த நிகழ்வுகளில் அந்தந்தப் பகுதி பக்தா்கள் கலந்து கொண்டனா்.

கீழ்பென்னாத்தூரில்..:

கீழ்பென்னாத்தூா் காந்தி தெருவில் உள்ள வரசித்தி விநாயகா் கோயில் மூலவருக்கு காலை 6 மணிக்கு சிறப்பு அபிஷேக-ஆராதனை நடைபெற்றது.

தொடா்ந்து, மூலவா் விநாயகருக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இரவு 8 மணிக்கு உற்சவா் விநாயகா் வீதியுலா நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்த வாரம் கலாரசிகன் - 21-12-2025

அமைதியின் அரசர் இயேசு

ஜெமிமா ரோட்ரிக்ஸ் அதிரடி; முதல் டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி!

திருக்குறளைச் சீர்தூக்கிப் போற்றுவோம்!

திருவடிமேல் உரைத்த தமிழ்

SCROLL FOR NEXT