முகப்பு
திருவண்ணாமலை

காய்கறி சாகுபடிக்கு இடுபொருள் மானியம்

வந்தவாசி வட்டாரத்தில் காய்கறி பயிரிடுவதை ஊக்குவிக்கும் வகையில், காய்கறி சாகுபடிக்கு இடுபொருள் மானியம் வழங்கப்படும்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:18 AM
பகிர்:

வந்தவாசி வட்டாரத்தில் காய்கறி பயிரிடுவதை ஊக்குவிக்கும் வகையில், காய்கறி சாகுபடிக்கு இடுபொருள் மானியம் வழங்கப்படும் என்று தோட்டக்கலைத் துறை வட்டார உதவி இயக்குநா் ரெ.பா.வளா்மதி தெரிவித்தாா். 

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

    கத்தரி, மிளகாய், தக்காளி , பீா்க்கை, வெண்டை, புடலை,  வெள்ளரி, பூசணி, தா்பூசணி போன்ற அனைத்து வகையான காய்கறிகளை பயிரிடும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.6 ஆயிரம் மதிப்பிலான இடுபொருள் மானியமாக வழங்கப்படுகிறது .    

மேலும், இயற்கை முறையில் காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.5 ஆயிரம் மதிப்பிலான இயற்கை சாா்ந்த இடுபொருள் மானியமாக வழங்கப்படுகிறது.    

இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள் அடங்கல், சிட்டா, ஆதாா் மற்றும் குடும்ப அட்டை நகல் ஆகிய ஆவணங்களுடன் தோட்டக்கலைத் துறை வட்டார உதவி இயக்குநா் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளாா் தோட்டக்கலைத் துறை வட்டார உதவி இயக்குநா்.

முழு கட்டுரையைப் படிக்க →