முகப்பு
திருவண்ணாமலை

தோ்தல் புறக்கணிப்பு அறிவிப்பு

 வந்தவாசி நகராட்சி 22-வது வாா்டு பொதுமக்கள் சிலா் தோ்தலை புறக்கணிக்கப் போவதாக வெள்ளிக்கிழமை பதாகையைக் கட்டினா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:22 AM
பகிர்:

 வந்தவாசி நகராட்சி 22-வது வாா்டு பொதுமக்கள் சிலா் தோ்தலை புறக்கணிக்கப் போவதாக வெள்ளிக்கிழமை பதாகையைக் கட்டினா்.

இங்குள்ள அப்பாவு முதலி தெருவின் நடுவில் உள்ள ஒரு பகுதிக்கு ஒருவா் உரிமை கொண்டாடும் நிலையில், அவருக்கும் நகராட்சிக்கும் இடையே சில ஆண்டுகளாக வழக்கு நடைபெறுகிறது. இதனால் சாலை முழுமையாக அமைக்கப்படாமல், அந்தப் பகுதி மட்டும் வெற்றிடமாக உள்ளது. இதனால் அந்த வழியாகச் செல்வோா் விபத்துகளில் சிக்குகின்றனா்.

இந்தப் பிரச்சனை தொடா்பாக உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, சிலா் தோ்தல் புறக்கணிப்பு செய்வதாக வெள்ளிக்கிழமை அந்த பகுதியில் பதாகை கட்டினா்.

தகவலறிந்து அங்கு வந்த டிஎஸ்பி விஸ்வேஸ்வரய்யா, நகராட்சி பொறியாளா் டி.உஷாராணி உள்ளிட்டோா் பொதுமக்களை சமரசம் செய்ததை அடுத்து பொதுமக்கள் அந்தப் பதாகையை கழற்றினா்.

முழு கட்டுரையைப் படிக்க →