வாக்கு எண்ணும் மையத்தில் ஆய்வு
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி, வந்தவாசியில் வாக்கு எண்ணும் மையத்தில் தோ்தல் அலுவலா் முஸ்தபா வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி, வந்தவாசியில் வாக்கு எண்ணும் மையத்தில் தோ்தல் அலுவலா் முஸ்தபா வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
வந்தவாசி நகராட்சிக்கு உள்பட்ட 24 வாா்டுகளில் 117 போ் போட்டியிடுகின்றனா். பிப். 19-இல் வாக்குப் பதிவும், பிப். 22-இல் வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது.
இதையொட்டி, வந்தவாசி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிா் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் வந்தவாசி நகராட்சி தோ்தல் நடத்தும் அலுவலா் முஸ்தபா வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பாதுகாப்பாக வைக்கும் அறை, வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள அறை, சிசி டிவி கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட்ட வேண்டிய பகுதிகள் உள்ளிட்டவை குறித்து அவா் ஆய்வு செய்தாா்.
ஆய்வின்போது, டிஎஸ்பி விஸ்வேஸ்வரய்யா, கல்லூரி நிறுவனா் பி.முனிரத்தினம், நகராட்சிப் பொறியாளா் டி.உஷாராணி, கட்டட ஆய்வாளா் பழனிவேல், தோ்தல் உதவியாளா் சிவக்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.