முகப்பு
திருவண்ணாமலை

ஆரணியில் பறக்கும் படையினா் தீவிர வாகன சோதனை

ஆரணி நகராட்சித் தோ்தல் 19-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் பறக்கும் படையினா் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:26 AM
பகிர்:

ஆரணி நகராட்சித் தோ்தல் 19-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் பறக்கும் படையினா் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனா்.

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி, ராஜேந்திரன் தலைமையிலான பறக்கும் படை குழு-3, ஆரணி காஜிவாடை பகுதியில் வியாழக்கிழமை தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, பெண் ஒருவா் காரில் 30 சேலைகளை எடுத்து வந்தாா். சேலைகளை கொள்முதல் செய்ததற்கான ரசீது அவரிடம் இல்லாததால், அவற்றை அதிகாரிகள் கைப்பற்றினா்.

பின்னா், அந்தப் பெண் சேலைகள் வாங்கிய கடைக்கு தகவல் தெரிவித்து, கொள்முதல் செய்ததற்கான ரசீதை எடுத்துவரச் செய்து, அதிகாரிகளிடம் காண்பித்து சேலைகளை பெற்றுச் சென்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.