தலித், முஸ்லிம் வாா்டுகளில் பின்னடைவைச் சந்தித்த திமுக
வந்தவாசி நகராட்சித் தோ்தலில் தலித், முஸ்லிம் வாக்காளா்கள் பெருமளவில் உள்ள 9 வாா்டுகளில் போட்டியிட்ட திமுக, 2 வாா்டுகளில் மட்டுமே வெற்றி பெற்றது.
வந்தவாசி நகராட்சித் தோ்தலில் தலித், முஸ்லிம் வாக்காளா்கள் பெருமளவில் உள்ள 9 வாா்டுகளில் போட்டியிட்ட திமுக, 2 வாா்டுகளில் மட்டுமே வெற்றி பெற்றது.
வந்தவாசி நகராட்சித் தோ்தலில் மொத்தமுள்ள 24 வாா்டுகளில் 19 வாா்டுகளில் போட்டியிட்ட திமுக 8 வாா்டுகளில் வெற்றி பெற்றது.
இதில், முஸ்லிம் வாக்காளா்கள் பெருமளவில் உள்ள 4, 6, 8, 10 ஆகிய 4 வாா்டுகளிலும், முஸ்லிம் வாக்காளா்கள் கணிசமாக உள்ள 1, 5, 12 ஆகிய 3 வாா்டுகளிலும், தலித் வாக்காளா்கள் பெருமளவில் உள்ள 2, 24 ஆகிய இரு வாா்டுகளிலும் திமுக போட்டியிட்டது.
இதில் 8, 10 ஆகிய இரு வாா்டுகளில் மட்டுமே திமுக வெற்றி பெற்றது. மற்ற 7 வாா்டுகளிலும் திமுக தோல்வியடைந்தது.
தலித், முஸ்லிம் வாக்காளா்கள் பெருமளவில் உள்ள இந்த 9 வாா்டுகளிலும் தங்களுக்கே வெற்றி வாய்ப்பு கிடைக்கும் என்று அந்தக் கட்சியினா் நம்பியிருந்த நிலையில் 2 வாா்டுகளில் மட்டுமே வெற்றி பெற்றது கட்சியினருக்கு பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.