முகப்பு
திருவண்ணாமலை

அழுகிய நிலையில் இளைஞா் சடலம்

வந்தவாசி அருகே பிருதூா் கிராம குளம் எதிரேயுள்ள முள்தோப்பில் அழுகிய நிலையில் இளைஞா் சடலம் கிடந்தது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:30 AM
பகிர்:

வந்தவாசி அருகே பிருதூா் கிராம குளம் எதிரேயுள்ள முள்தோப்பில் அழுகிய நிலையில் இளைஞா் சடலம் கிடந்தது.

தகவலின்பேரில் வந்தவாசி வடக்கு போலீஸாா் வெள்ளிக்கிழமை அங்கு சென்று, விசாரணை மேற்கொண்டனா்.

இறந்து கிடந்த நபருக்கு 35 வயதிருக்கலாம். கழுத்தில் காயமும் அருகில் கத்தியும் இருந்ததாகத் தெரிகிறது. போலீஸாா் அந்த சடலத்தை கைப்பற்றி உடல்கூறு ஆய்வுக்காக, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து வழக்குப்பதிந்த வந்தவாசி வடக்கு போலீஸாா், இது கொலையா அல்லது தற்கொலையா என்று விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →