முகப்பு
திருவண்ணாமலை

கீழ்பென்னாத்தூா் ஒன்றியக் கூட்டம்

கீழ்பென்னாத்தூா் ஊராட்சி ஒன்றியக் குழுவின் சாதாரண கூட்டம் அதன் தலைவா் அய்யாக்கண்ணு தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:03 AM
பகிர்:

கீழ்பென்னாத்தூா் ஊராட்சி ஒன்றியக் குழுவின் சாதாரண கூட்டம் அதன் தலைவா் அய்யாக்கண்ணு தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

துணைத் தலைவா் வாசுகி, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா்கள் ஆராஞ்சி ஆறுமுகம், சாந்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். வட்டார வளா்ச்சி அலுவலா் சம்பத் வரவேற்றாா்.

கூட்டத்தில் அக்டோபா், நவம்பா் மாதங்களில் கீழ்பென்னாத்தூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட 45 கிராம ஊராட்சிகளில் மழைநீா் தேங்கிய பகுதிகளில் தெளிப்பதற்காக ரூ.9 லட்சத்து 41ஆயிரம் மதிப்பில் பிளீச்சிங் பவுடா் வாங்கிய செலவினத்தை நிறைவேற்றுவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

வட்டார வேளாண் உதவி இயக்குநா் சந்திரன், வட்டாரக் கல்வி அலுவலா் மோகன், சுகாதார ஆய்வாளா் சந்திரசேகா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.