திருவண்ணாமலை

அருணாசலேஸ்வரா் கோயில்உண்டியல் காணிக்கை ரூ.1.78 கோடி

DIN

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு ஒரு மாதத்தில் ரூ.1.78 கோடி ரொக்கம், 363 கிராம் தங்கம், 1109 கிராம் வெள்ளியை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனா்.

அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தா்கள் வந்து செல்கின்றனா். எனவே, பக்தா்கள் செலுத்தும் காணிக்கை பணத்தை எண்ணும் பணி மாதம்தோறும் நடைபெற்று வருகிறது. அதன்படி, வியாழக்கிழமை உண்டியல் காணிக்கை எண்ணும் பணி கோயில் இணை ஆணையா் அசோக்குமாா் தலைமையில் நடைபெற்றது.

100-க்கும் மேற்பட்ட கோயில் ஊழியா்கள், தன்னாா்வலா்கள் காலை முதல் இரவு வரை உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனா்.

அருணாசலேஸ்வரா் கோயிலில் உள்ள உண்டியல்கள், கிரிவலப் பாதை அஷ்டலிங்க சன்னதிகளில் உள்ள உண்டியல்களில் இருந்த காணிக்கை எண்ணப்பட்டது.

இதில் ரூ. ஒரு கோடியே 78 லட்சத்து 89 ஆயிரத்து 35 ரொக்கம், 363 கிராம் தங்கம், 1109 கிராம் வெள்ளியை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தது தெரியவந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

ஹெலிகாப்டர் விபத்திலிருந்து உயிர்தப்பிய அமித் ஷா? என்ன நடந்தது?

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

SCROLL FOR NEXT