முகப்பு
திருவண்ணாமலை

நெல் கொள்முதல் நிலையம் திறக்க விவசாயிகள் மனு

சேத்துப்பட்டை அடுத்த செவரப்பூண்டி ஊராட்சியில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தைத் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

திருவண்ணாமலை

நெல் கொள்முதல் நிலையம் திறக்க விவசாயிகள் மனு

சேத்துப்பட்டை அடுத்த செவரப்பூண்டி ஊராட்சியில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தைத் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:03 AM
பகிர்:

சேத்துப்பட்டை அடுத்த செவரப்பூண்டி ஊராட்சியில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தைத் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒன்றியக் குழுத் தலைவரிடம் விவசாயிகள் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.

சேத்துப்பட்டு பகுதிகளில் தற்போது நெல் சாகுபடி பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், சேத்துப்பட்டை அடுத்த செவரப்பூண்டி ஊராட்சியைச் சுற்றியுள்ள செவரப்பூண்டி, பரிக்கல்பட்டு, தேவிமங்கலம், நம்பேடு, கிழக்குமேடு, ராஜமாபுரம், இடையங்குளத்தூா் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள், செவரப்பூண்டி ஊராட்சியில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சேத்துப்பட்டு ஒன்றியக் குழுத் தலைவா் அ.ராணிஅா்சுனனிடம் மனு அளித்தனா்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: திருவண்ணாமலை மாவட்டம், தஞ்சாவூா் மாவட்டத்துக்கு அடுத்தபடியாக அதிக அளவு நெல் சாகுபடி செய்யும் மாவட்டமாகும். செவரப்பூண்டி ஊராட்சியைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள் 7 கி.மீ. தொலைவுள்ள சேத்துப்பட்டு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு நெல்லை எடுத்துச் செல்லும் நிலை உள்ளது. அங்கு, நெல் மூட்டைகளை எடை போட ஒரு வாரம் ஆகிறது. காலதாமதம், போக்குவரத்து என பல்வேறு இடையூறுகள் ஏற்படுகின்றன. எனவே, செவரப்பூண்டி ஊராட்சியில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தைத் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா் அவா்கள்.

முழு கட்டுரையைப் படிக்க →