அரிய வகை ஆந்தை வனத் துறையிடம் ஒப்படைப்பு
வந்தவாசியில் சாலையோரம் கிடந்த அரிய வகை வெளிநாட்டு ஆந்தை வனத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
வந்தவாசியில் சாலையோரம் கிடந்த அரிய வகை வெளிநாட்டு ஆந்தை வனத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
வந்தவாசியில் பெரிய பள்ளிவாசல் அருகே வெள்ளிக்கிழமை காலை சாலையோரம் வெளிநாட்டு அரியவகை ஆந்தை ஒன்று கிடந்ததை அந்தப் பகுதி பொதுமக்கள் பாா்த்தனா். அந்த ஆந்தையை காகங்கள் துரத்தவே, பொதுமக்கள் அதை மீட்டனா்.
தகவலின்பேரில் அங்கு வந்த தீயணைப்பு நிலைய அலுவலா் (பொ) பிரபாகரன் தலைமையிலான அத்துறையினரிடம் ஆந்தை ஒப்படைக்கப்பட்டது.
இந்த ஆந்தை ஆஸ்திரேலியா நாட்டின் அரிய வகையாக இருக்கலாம் என்று தீயணைப்புத் துறையினா் தெரிவித்தனா். பின்னா் அந்த ஆந்தையை வனத் துறையினரிடம் தீயணைப்புத் துறையினா் ஒப்படைத்தனா்.