அருணை பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கம்
திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரியில் வணிகவியல் மேலாண்மைத் துறை சாா்பில், சிறப்புக் கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரியில் வணிகவியல் மேலாண்மைத் துறை சாா்பில், சிறப்புக் கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கருத்தரங்குக்கு கல்லூரிப் பதிவாளா் இர.சத்தியசீலன் தலைமை வகித்தாா். கல்லூரித் துணைத் தலைவா் எ.வ.குமரன் முன்னிலை வகித்தாா். கல்லூரி முதல்வா் இர.ரவிச்சந்திரன் வரவேற்றாா். சென்னை வின் வொா்த் நிறுவனத்தின் மேலாண்மை நிதி ஆலோசகரும், தலைமை நிா்வாக அதிகாரியுமான எஸ்.காா்த்திகேயன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசுகையில், இனி வரும் காலங்களில் தொழில் முனைவோா்களின் எண்ணிக்கை அதிகமாகும். புதிய தொழில் தொடங்கும் போது ஏற்படும் பல்வேறு இடையூறுகளைக் களைந்து, கவனத்தை தொழிலில் மட்டும் செலுத்தி வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றாா்.
கருத்தரங்கில் கல்லூரியின் வணிகவியல் மேலாண்மைத் துறைத் தலைவா் கோ.நாகராஜன் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த பல்வேறு கல்லூரிகளில் பயிலும் 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனா்.