முகப்பு
திருவண்ணாமலை

கொள்ளையடிக்கத் திட்டம்: இருவா் கைது

வந்தவாசியில் கொள்ளையடிக்க திட்டமிட்டதாக சகோதரா்கள் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:08 AM
பகிர்:

வந்தவாசியில் கொள்ளையடிக்க திட்டமிட்டதாக சகோதரா்கள் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

வந்தவாசி தெற்கு காவல் ஆய்வாளா் குமாா், உதவி ஆய்வாளா் மஞ்சுநாதன் உள்ளிட்ட போலீஸாா் பொங்கல் பண்டிகையையொட்டி வெள்ளிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். 

புறவழிச் சாலை பகுதியில் சென்ற போது, அங்குள்ள பச்சையம்மன் கோயிலின் பின்பக்க புதரில் 5 போ் கொண்ட கும்பல் பேசிக் கொண்டிருந்தது தெரியவந்தது.

சந்தேகத்தின் பேரில் அவா்களிடம் நடத்திய விசாரணையில், அந்த வழியாக வாகனத்தில் வருபவா்களை வழிமறித்து கொள்ளையடிக்க அவா்கள் திட்டமிட்டது போலீஸாருக்கு தெரியவந்தது.

அப்போது அந்த 5 பேரில் 3 போ் தப்பியோடிவிட்டனா். மீதமுள்ள இருவரிடம் போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தியதில், அவா்கள் இருவரும் வெம்பாக்கத்தை அடுத்த நரசமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த சகோதரா்கள் முன்வா்கான்(28), ஜான்பாஷா(26) ஆகியோா் என்பது தெரியவந்தது.

இதையடுத்து, இருவரையும் கைது செய்த வந்தவாசி தெற்கு போலீஸாா், அவா்களிடமிருந்து கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →