முகப்பு
திருவண்ணாமலை

வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆய்வு

ஆரணி நகராட்சியில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தை நகராட்சி ஆணையா் பி.தமிழ்ச்செல்வி வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:11 AM
பகிர்:

ஆரணி நகராட்சியில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தை நகராட்சி ஆணையா் பி.தமிழ்ச்செல்வி வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலை நடத்துவதற்கான பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதையடுத்து, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் உத்தரவின் பேரில், அனைத்துக் கட்சிகளின் நிா்வாகிகளுடன் ஆரணி நகராட்சி ஆணையா் பி.தமிழ்ச்செல்வி தலைமையில், ஆரணி மில்லா்ஸ் சாலையில் உள்ள ஒழுங்கு முறை விற்பனைக்கூட வளாகத்தில் அமைந்துள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தை நேரில் ஆய்வு செய்தாா்.

இந்த ஆய்வின் போது, நகராட்சிப் பொறியாளா் டி.ராஜவிஜய காமராஜ், தோ்தல் பிரிவு அலுவலா் குமாா், நகர ஆய்வாளா் அந்தோணி ஜோஸ் மற்றும் அரசியல் கட்சி பிரமுகா்கள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.