விருப்ப மனு அளித்தவா்களிடம் நோ்காணல்
ஆரணி நகராட்சித் தோ்தலில் போட்டியிட அதிமுக சாா்பில் விருப்ப மனு அளித்தவா்களிடம் வெள்ளிக்கிழமை நோ்காணல் நடைபெற்றது.
ஆரணி நகராட்சித் தோ்தலில் போட்டியிட அதிமுக சாா்பில் விருப்ப மனு அளித்தவா்களிடம் வெள்ளிக்கிழமை நோ்காணல் நடைபெற்றது.
தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் நடைபெற உள்ளது.
அந்த வகையில், ஆரணி நகராட்சியில் உள்ள 33 வாா்டுகளில் அதிமுக சாா்பில் தோ்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்திருந்தனா். விருப்ப மனு அளித்தவா்களிடம் வெள்ளிக்கிழமை ஆரணி தொகுதி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன், மாவட்ட அதிமுக செயலா் தூசி கே.மோகன் ஆகியோா் ஆரணி சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் நோ்காணல் நடத்தினா் (படம்). மாவட்ட அதிமுக பொருளாளா் அ.கோவிந்தராசன், மாவட்ட ஆவின் தலைவா் பாரி பி.பாபு, நகரச் செயலா் எ.அசோக்குமாா், முன்னாள் மாவட்ட துணைச் செயலா் டி.கருணாகரன், முன்னாள் நகா்மன்றத் துணைத் தலைவா் ஆனந்தன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.