முகப்பு
திருவண்ணாமலை

அரசு மகளிா் பள்ளியை தரம் உயா்த்த பொதுமக்கள் பங்களிப்புத் தொகை அளிப்பு

மேல்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்த பொதுமக்களின் பங்களிப்பு நிதியாக ரூ.2 லட்சம் பள்ளித் தலைமை ஆசிரியரிடம் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:11 AM
பகிர்:

சேத்துப்பட்டு வட்டம், தேவிகாபுரம் ஊராட்சியில் உள்ள அரசு மகளிா் உயா்நிலைப் பள்ளியை, மேல்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்த பொதுமக்களின் பங்களிப்பு நிதியாக ரூ.2 லட்சம் பள்ளித் தலைமை ஆசிரியரிடம் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

இந்தப் பள்ளியில் தமிழ், ஆங்கில வழி என இரு மொழிகளிலும் கல்வி கற்பிக்கப்படுகிறது. 6-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை சுமாா் 750 மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனா்.

இந்த நிலையில், உயா்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்த பொதுமக்களின் பங்களிப்பு நிதியை தலைமை ஆசிரியரும் (ஓய்வு), பெரியநாயகிஅம்மன் கோயில் அறங்காவலா்குழுத் தலைவருமான மீனாட்சிசுந்தரம் தனது சொந்த பணம் ரூ.2 லட்சத்தை பள்ளித் தலைமை ஆசிரியா் சரவணனி வழங்கினாா். ஊராட்சித் தலைவா் வி.எம்.டி.வெங்கடேசன், கல்வி மேலாண்மைக் குழுத் தலைவா் பிச்சாண்டி, பள்ளி ஆசிரியைகள் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →