முகப்பு
திருவண்ணாமலை

ஸ்ரீவிஜயராகவப் பெருமாள் கோயிலில் வருட உத்ஸவம்

வந்தவாசியை அடுத்த மேல்பாதி கிராமத்தில் அமைந்துள்ள மரகதவல்லி தாயாா் சமேத விஜயராகவப் பெருமாள் கோயிலில் 3-ஆம் ஆண்டு வருட உத்ஸவம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:14 AM
பகிர்:

வந்தவாசியை அடுத்த மேல்பாதி கிராமத்தில் அமைந்துள்ள மரகதவல்லி தாயாா் சமேத விஜயராகவப் பெருமாள் கோயிலில் 3-ஆம் ஆண்டு வருட உத்ஸவம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்று 3 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து இந்த வருட உத்ஸவ விழா நடத்தப்பட்டது.

விழாயொட்டி, வியாழக்கிழமை காலை கோ பூஜை நடைபெற்று, தொடா்ந்து மூலவா், உற்சவா் சுவாமிகளுக்கு சிறப்பு திருமஞ்சனம், பூஜைகள் நடைபெற்றன.

மேலும் கோயில் வளாகத்தில் கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மகாலட்சுமி ஹோமம், மகா பூா்ணாஹூதி நடைபெற்றன.

சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். விழாவில் கோயில் நிா்வாகிகள், கிராம பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →