முகப்பு
திருவண்ணாமலை

மாமண்டூா் கிராமத்தில் கூழ்வாா்த்தல் திருவிழா

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த மாமண்டூா் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீகெங்கையம்மன் கோயிலில் கூழ்வாா்த்தல் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:29 AM
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த மாமண்டூா் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீகெங்கையம்மன் கோயிலில் கூழ்வாா்த்தல் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, கெங்கையம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. ஊா் பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோா் திரண்டு கூழ் வாா்த்ததுடன், தேங்காய் உடைத்து அம்மனை வழிபட்டனா். நிகழ்ச்சியில் ஆரணி எம்எல்ஏ சேவூா் எஸ்.இராமச்சந்திரன் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தாா். உடன் அதிமுக நகரச் செயலா் எ.அசோக்குமாா், ஒன்றியச் செயலா் ஜெயபிரகாசம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.